தன்னிடம் வெள்ளைப் பேப்பர் கேட்ட ராகவியைப் பார்த்து "என்ன அண்ணி... திடீர்ன்னு கவிதை எதுவும் எழுதப் போறீங்களா?" என்று கிண்டல் செய்தாள் வளர்மதி.
"என்னடி கிண்டலா... எனக்கு வேணும்... பேப்பர் இருக்கா... இல்லையா..."
"சரி... எதுக்குன்னு சொல்லுங்க தாரேன்..."
"அது... உங்கண்ணனுக்கு லெட்டர் எழுதி, நாளைக்கு நம்ம ராமச்சந்திரண்ணன் போகுதுல்ல அதுக்கிட்ட கொடுத்துவிடத்தான்..."
"அண்ணி... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க... தினமும் செல்லுல பேசுறீங்க... நாங்க உங்களுக்கு டிஸ்டர்ப்பா இருந்தா வீதிக்கு வீதி இண்டர்நெட் சென்டர் தொறந்து வச்சிருக்கான். அங்க போயி உங்க மனசுல உள்ளதையெல்லாம் கொட்டி மெயில் அனுப்பிட்டு வரலாம். அத விட்டுட்டு லெட்டர் அது... இதுன்னு... எந்தக் காலத்துல அண்ணி இருக்கீங்க..."
அவளது கேள்விக்கு ஒற்றைச் சிரிப்பை மட்டும் பதிலாக்கி விட்டு பேப்பரை வாங்கிக் கொண்டு தனியாகப் போயி அமர்ந்தாள்.
கை வளையல்களை ஏற்றிவிட்டுக் கொண்டு பேப்பரில் எழுத ஆரம்பித்தாள்.
'என் அன்புள்ள அத்தானுக்கு... நலம், நலமறிய ஆவல்ன்னு ஒற்றை வரியில சொல்ல என்னால முடியலைங்க... நீங்க இங்க சுகம்... நான் அங்க சுகமான்னு சினிமா வசனமெல்லாம் எழுத வராதுங்க எனக்கு... ஆனா அங்க நீங்களும்... இங்க நானும் உதட்டுல புன்னகை பூசி வாழ்றோங்கிறது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுங்க...'
'அப்புறம் இங்க அத்தை, மாமா, வளரு, கணேசு எல்லாரும் நல்லாருக்காங்க. இந்த வருசம் மழை இப்பத்தான் பெய்ய ஆரம்பிச்சிருக்கு. நீங்க என்னய நினைச்சுக்கிட்டு சாப்பிடாம கெடக்காதீங்க... உடம்புக்கு ஆகாது. ஆனா எனக்கு இங்க சாப்பாடே இறங்கலைங்க... எப்ப சோறு போட்டுக்கிட்டு உக்காந்தாலும் உங்க முகம் கண்ணுக்குள்ள மட்டுமில்லங்க... போட்டுருக்க சாப்பாட்டுலயும் தெரியுதுங்க... ' அதற்குமேல் எழுதமுடியாமல் கண்களை கண்ணீர் கட்டிக் கொண்டது. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
'அப்பாவும் அம்மாவும் வந்துட்டுப் போனாங்க... அங்க வந்து கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாமுன்னு சொன்னாங்க... எனக்குத்தான் போக புடிக்கலை... நாம இருந்த ரூமுக்குள்ள படுக்கும் போது எதோ நீங்களும் எங்கூட இருக்க மாதிரி இருக்குங்க... அதான் போகலைங்க...'
'சரி... நம்ம லெட்சுமி கன்னு போட்டிருக்கு... இது நாலாவது கன்னுன்னு அத்தை சொன்னாங்க... பொங்கன்னுக்குட்டி... பொங்கன்னுக்குட்டியினவுடனே எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அது ஏங்க பொம்பளைப்புள்ளை பொறந்தா வெறுக்குற நாம ஆடோ மாடோ பொங்கன்னுக்குட்டி போட்ட சந்தோஷப்படுறோம்... ஆமா நமக்கு பொம்பளைப்புள்ள பொறந்த உங்கப்பாம்மா இப்படி சந்தோஷப்படுவாங்களா... நினைச்சதும் எனக்கு சிரிப்பு வந்துருச்சுங்க...' எழுதியபோது அவளையறியாமல் சிரிப்பு வந்தது.
'இன்னொன்னு எழுத மறந்துட்டேன்... நம்ம தோப்புல இருக்க மாமரம் நல்லா காச்சிருக்கு... நேத்து நம்ம வீட்டுக்கு வந்த உங்க சின்னம்மா... எதாவது விசேசமாம்மான்னு கேட்டாங்க... ஒண்ணும் சொல்லாமா இருந்துட்டேன்... அப்புறம் அவங்களா இன்னும் ரெண்டு வருசத்துக்கு பேரன் பேத்திய பாக்க முடியாதாக்குமுன்னு சொன்னாங்க... நான் என்னங்க சொல்ல முடியும் ஒரு மாசம் குடும்பம் நடத்தி... இப்ப வேண்டாம் ரெண்டு வருசமாகட்டுமுன்னு நீங்க சொன்னதை எப்படி அவங்கிட்டே சொல்வேன்... நல்லவேளை உங்க அம்மா... இப்ப என்ன அவசரம்... அவளும் சின்னப் பொண்ணுதானேன்னு சொல்லிட்டாங்க...'
'ராமச்சந்திரண்ணன் வந்ததுல இருந்து சரோஜாண்ணி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க... ஒரு மாசமா ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாவே திரிஞ்சாங்க... அவங்களை பாக்கிறப்போல்லாம் எனக்கு உங்க ஞாபகம்தான் வந்துச்சு... நாமளும் அப்படித்தானே இருந்தோம்... ம்... எனக்கு அதை நெனைக்கிறப்போ மனசு வலிச்சு... கண்ணுல கண்ணீர் வழிய ஆரம்பிச்சிருதுங்க...'
கண்ணை தொடச்சுக்கிட்டே... ' நா ஒரு கிறுக்கச்சி சரோஜாக்கா பத்தி சொல்ல வந்துட்டு எதையோ எழுதிட்டு இருக்கேன் பாருங்க... எதையும் நெனச்சுக்காதீங்க... ரெண்டு நாளா சரோஜாக்கா முகமே சரியில்லை... பாவம் அழுதுருக்கும் போல... முகமெல்லாம் கருத்து... வீங்குனமாதிரி இருக்கு... எங்க எல்லார் தலையெழுத்தும் ஒண்ணுதான் போல... இல்லையாங்க...'
கண்ணை தொடச்சுக்கிட்டே... ' நா ஒரு கிறுக்கச்சி சரோஜாக்கா பத்தி சொல்ல வந்துட்டு எதையோ எழுதிட்டு இருக்கேன் பாருங்க... எதையும் நெனச்சுக்காதீங்க... ரெண்டு நாளா சரோஜாக்கா முகமே சரியில்லை... பாவம் அழுதுருக்கும் போல... முகமெல்லாம் கருத்து... வீங்குனமாதிரி இருக்கு... எங்க எல்லார் தலையெழுத்தும் ஒண்ணுதான் போல... இல்லையாங்க...'
'ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் போங்க... நம்ம கணேசு என்ன பண்ணியிருக்கார் தெரியுமா... எழுத நெனைக்கிறப்போவே சிரிப்பா வருது... நம்ம மூலைவீட்டு செல்லச் சித்தப்பா இருக்காகல்ல... அவங்க மக... அதாங்க ரேவதி, அதுக்கு லவ் லெட்டர் கொடுத்து இருக்காரு... ஆமா...மீசை மொளைக்க ஆரம்பிச்சிருச்சுல்ல... அந்தப் புள்ளை நேர அத்தைகிட்ட கொண்டாந்து கொடுத்து அழுதுட்டுப் போச்சு... தலைவர் வீட்டுக்குள்ள வந்ததும் அத்தை வெளக்குமாத்தால தாலாட்டிட்டாங்க... எனக்கும் வளருக்கும் சிரிச்சு மாளலை... இப்ப நல்ல புள்ளையாட்டம் இருக்கான்... ஆனா சிகரெட் புடிப்பான் போல தெரியுது... இதை நீங்க மனசுல வச்சுக்கங்க... கேட்டுக்கீட்டு தொலச்சிடாதீங்க... அப்புறம் நாந்தான் சொல்லிட்டேன்னு எங்கிட்ட சண்டைக்கு வந்துருவான்... சரிங்களா'
'அப்புறம் இந்த வருசம் கோயில் திருவிழா சம்பந்தமா கூட்டம் கூட்டுனாங்க... பிரச்சினை எதுவுமில்லாம நல்ல முடிவா எடுத்து இருக்காங்க... நீங்க இல்லாம எனக்கு நாளும் பொழுதும் ஓடவேயில்லங்க.. எதப் பார்த்தாலும் உங்க ஞாபகமாகவே இருக்குங்க... என்னால முடியலங்க... எதோ வாழனுங்கிறதுக்காக வாழ்றேங்க...' வழிந்த கண்ணீரை துடைத்தபடி எழுத ஆரம்பிக்க, அவளது கண்ணீர் பட்டு சில எழுத்துக்கள் சிதிலமாகின.
'இப்ப உங்களுக்கு லெட்டர் எழுதலாமுன்னு பேப்பர் கேட்டப்போ வளர்கூட இண்டர்நெட், செல்லுன்னு எத்தனையோ இருக்கிறப்போ என்னண்ணி லெட்டர் எழுதுறேன்னு பழங்காலத்துக்குப் போறீங்கன்னு கேட்டா... செல்லுல பேசும் போது நல்லா இருக்கேன்னு நானும்... நீங்களும் மாத்திமாத்தி சொல்லிக்கிட்டு போன் மேல கிஸ் கொடுக்கிறப்போ படியுற நம்ம மனச்சாயத்தை ரெண்டு பேரும்மே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம மறச்சிடுறோம்... ' சற்றே எழுத முடியாமல் அமர்ந்திருந்தாள்.
சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தாள் 'மெயில்ல டைப்பண்ணி அனுப்பினா... மெஷினாட்டம் படிச்சிட்டு உங்க மனவலிய மறச்சி எல்லாம் சரியாகுமுன்னு ஒத்த வரியில பதில் அனுப்புவீங்க... இங்க இருக்க என்னோட மனசு தெரியனுமின்னா லெட்டர்தான் சரியின்னு எனக்குப்படுது... ஏன்னா... இந்த லெட்டர்ல அங்கங்க என்னய மாதிரியே எழுத்து சிதிலமடஞ்சிருக்குல்ல... அதெல்லாம் என்னோட கண்ணீர்... ' அவளை அறியாமல் கண்ணீர்த்துளி ஒன்று அவள் எழுதிய கண்ணீரின் மீது விழுந்தது.
'இதைப் படிக்கும் போது என்னோட மனசு உங்களுக்குள்ள விசாலமா விரியுங்க... இதை நான் உங்களை கஷ்டப்படுத்த சொல்லலைங்க... எல்லா ராத்திரியும் ரெண்டு பேரோட தலகாணியும் நனையும் இந்த வாழ்க்கை உண்மையை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் சொல்கிறேன்...'
'சரிங்க... இரவுகளில் என் இளமை தகிக்கிறது.... என்னை நானே... இல்லை நம்மை நாமே எரித்துக் கொள்கிறோம் தூங்காத ராத்திரிகளில்... இந்த வாழ்க்கைதான் நமக்கான வாழ்வு என்றால் இன்னும் நானூற்றி முப்பத்தோரு நாளில் நீங்க வரும் போது எனக்குள்ள விதச்சிட்டுப் போங்க... எனது தனிமைக்கு ஆறுதலாகவாவது இருக்கும்.'
'சரிங்க... நா... எதோ கிறுக்கச்சி மாதிரி மனசுல உள்ளதெல்லாம் கொட்டியிருக்கேன். எதுவும் மனசுல வச்சுக்காதீங்க... உடம்ப பாத்துக்கங்க... வாரத்துல ஒருநா... எண்ண தேச்சுக் குளிங்க... உடம்ப பாத்துங்க... இங்க நா.. அத்தை... மாமா... வளரு... கணேசு... இப்படி எல்லாரோடவும் சந்தோஷமா இருக்கேன்... என்னயவே நெனச்சுக்கிட்டு சாப்பிடாம இருக்காதீங்க... நீங்க நல்லாயிருந்தாத்தான் நாளைக்கு நமக்கு பொறக்குற புள்ளைங்க நல்லாயிருக்கும்.'
'ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பேசுங்க... எனக்காகாக... ப்ளீஸ்... என்றும் உங்களை மட்டுமே நினைத்து வாழும் உங்கள் செல்லம்' லெட்டரை எழுதி மடித்து நிமிர்ந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
"என்ன அண்ணி... முடிஞ்சதா... சாப்பிடலாமா...?"
"நீ... சாப்பிடு வளர்... எனக்கு இப்ப வேண்டாம்..." என்றபடி அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
**************
போட்டோவுக்கு நன்றி : Google
குறிப்பு: எனது நண்பன் தமிழ்க்காதலன் எழுதிய கவிதையின் தலைப்பையே கதையின் தலைப்பாக அவனது அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறேன். நன்றி நண்பா.
-'பரிவை' சே.குமார்.
நண்பர்களே...
பதிலளிநீக்குகடந்த சில பதிவுகளாக தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் பிரச்சினை. இந்தப் பதிவை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள். நன்றி.
//கடந்த சில பதிவுகளாக தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் பிரச்சினை. இந்தப் பதிவை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள். நன்றி.//
பதிலளிநீக்குமுடியல.........
ரசிக்கும் படியான சிறுகதை...
பதிலளிநீக்குரொம்ப டச்சிங்கா இருந்தது குமார்..கடைசியில் அந்த லெட்டரை போஸ்ட் பண்ணலை-ங்கிற மாதிரி ட்விஸ்ட் எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்கு//கடந்த சில பதிவுகளாக தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் பிரச்சினை. இந்தப் பதிவை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள். நன்றி.//
பதிலளிநீக்குயோவ், நக்கலா...அவனவன் ரெண்டு மாசமா இணைக்க முடியாம புலம்பிக்கிட்டுத் திரியறான்..இப்போ ஊர்ல இருந்து வந்துட்டு ‘என்னது காந்தி செத்துட்டாரா’ன்னு கேட்கீரு!
அருமையான சிறுகதை..
பதிலளிநீக்கு// ஏன்னா... இந்த லெட்டர்ல அங்கங்க என்னய மாதிரியே எழுத்து சிதிலமடஞ்சிருக்குல்ல... அதெல்லாம் என்னோட கண்ணீர்... //
பதிலளிநீக்குஉருக்கம். நேச முடிச்சு பலமானதாக..
நன்று குமார்.
தமிழ்மணம் அறிவிப்புப் பதிவைப் பார்க்கவில்லையா நீங்கள்? பதிவுகள் திரட்டும் சேவையை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக சொல்லியுள்ளார்கள்.
கணவனை பிரிந்திருக்கும் மனைவியின் உணர்வுகளை மிகவும் அழகாக சொல்லியிருகீங்க குமார்.நல்ல நெகிழ்ச்சியான கதை....
பதிலளிநீக்குsuper kathai! well written.
பதிலளிநீக்குஉணர்வுபூர்வமான சிறுகதை,நல்லாயிருக்கு...
பதிலளிநீக்குஅருமை குமார்
பதிலளிநீக்கு'மெயில்ல டைப்பண்ணி அனுப்பினா... மெஷினாட்டம் படிச்சிட்டு உங்க மனவலிய மறச்சி எல்லாம் சரியாகுமுன்னு ஒத்த வரியில பதில் அனுப்புவீங்க... இங்க இருக்க என்னோட மனசு தெரியனுமின்னா லெட்டர்தான் சரியின்னு எனக்குப்படுது... ஏன்னா... இந்த லெட்டர்ல அங்கங்க என்னய மாதிரியே எழுத்து சிதிலமடஞ்சிருக்குல்ல... அதெல்லாம் என்னோட கண்ணீர்... ' அவளை அறியாமல் கண்ணீர்த்துளி ஒன்று அவள் எழுதிய கண்ணீரின் மீது விழுந்தது.
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான வரிகள் குமார் மிக மிக ரசித்தேன்
இப்ப நல்ல புள்ளையாட்டம் இருக்கான்... ஆனா சிகரெட் புடிப்பான் போல தெரியுது... இதை நீங்க மனசுல வச்சுக்கங்க... கேட்டுக்கீட்டு தொலச்சிடாதீங்க...,,,,hahaha,,,,,
பதிலளிநீக்குகுமாரண்ணா அசத்தல் கதை...
வாழ்த்துக்கள்,,,
குமாரண்ணா பிள்ளையளின் போட்டோ நல்லதாய் போடலாமே clear இல்லை..
பதிலளிநீக்குnamma pakkam kaanala?
அருமையா இருக்குங்க
பதிலளிநீக்குஅருமையா இருக்குங்க
பதிலளிநீக்குஇப்படிக் கதைகள் எத்தனை,நிஜத்தில்?எத்துணை???????
பதிலளிநீக்கு>>செங்கோவி said...
பதிலளிநீக்கு//கடந்த சில பதிவுகளாக தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் பிரச்சினை. இந்தப் பதிவை இணைக்க முடிந்தால் இணைத்து விடுங்கள். நன்றி.//
யோவ், நக்கலா...அவனவன் ரெண்டு மாசமா இணைக்க முடியாம புலம்பிக்கிட்டுத் திரியறான்..இப்போ ஊர்ல இருந்து வந்துட்டு ‘என்னது காந்தி செத்துட்டாரா’ன்னு கேட்கீரு!
haa haa ஹா ஹா சேம் பிளட்
வாங்க தொப்பி தொப்பி...
பதிலளிநீக்குஉங்கள் முயற்சிக்கும் வருகைக்கும் நன்றி.
வாங்க சௌந்தர்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க செங்கோவி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அட ரெண்டு மாசமா காஞ்சுபோயி இருக்கீங்களா... தெரியலைங்களேண்ணா... அடி ஆத்தா என்ன கொலைவெறி... சரி விடுங்க... ஆமா ஒரு சிலர் மட்டும் இணைக்கிறாங்களே எப்படி?
வாங்க கருன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ராமலெஷ்மி அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் சொன்னதுக்கும் பிறகுதான் பார்த்தேன்... உங்கள் தகவலுக்கு நன்றி.
வாங்க அக்கா( RAMVI)
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க மேனக்காக்கா...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க விடிவெள்ளி...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் கருத்துப்படி பாப்பா போட்டோ மாற்றியாச்சு... விடாமல் உங்கள் பக்கம் படிக்கிறேன்... பின்னூட்டம் இட முடியாமல் எனது பக்கம் பிரச்சினை... அதான். விரைவில் சரியாகும்.
வாங்க NAZEE...
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க Yoga.S.ER...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சிபி அண்ணா...
அங்கயுமா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனசைத்தொட்ட கதை..
பதிலளிநீக்குமனதை நெகிழவைத்த கடித வரிகள்.
பதிலளிநீக்கு