தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் முரளி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணிகள் மத்தியில் வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முரளியும் ஒருவர்.
பிறந்தது கர்நாடகம் என்றாலும் தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிப்படங்களில் நடிக்கவில்லை. அம்மா தமிழ் நாட்டவர் என்பதால் தமிழ்நாட்டை தாய் நாடாக நினைத்தவர். தனது குடும்பம் பற்றியோ தன்னைப் பற்றியோ தவறான செய்திகள் வராமல் வாழ்ந்தவர்.
தமிழில் 1984ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான பூவிலங்கு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.
தான் நடிக்கும் கதாபாத்திரம் என்னவோ அதை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்தவர் முரளி என்றால் மிகையாகாது. நடிகர் மோகன் படங்களில் பாடல்கள் எப்படி ஹிட் ஆகுமோ அது போல் இவரது படப் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி அமைந்தன.
பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராகவே நடித்துள்ளார். தனது மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதில் என்ன கதாபாத்திரம் தெரியுமா? மருத்துவக் கல்லூரி மாணவர். அதில் அவர் பேசும் வசனத்தில் "நான் இதயம் ராஜா, எம்.பி.பி.எஸ். நான் காம் ஆண்டு படிக்கிறேன்" என்பார். "இன்னமா காலேசு படிக்கிறாரு" என்று ஒருவன் சொல்வான். வயதானதே தெரியாத நடிகர்.
46 வயது மரணிக்கக் கூடிய வயதா..?. 'இதயமே... இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே..' என்று பாடி நடித்தவர், இதயவலியால் மரணமடைந்தார் என்னும் போது நமக்கு மனசு வலிக்கிறது.
மகன் நடிக்க வந்ததும் ஓய்வெடுக்க நினைத்திருப்பார் போல, ஆனால் நிரந்தர ஓய்வெடுப்பார் என்று குடும்பத்தார்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
பூவிலங்கு, பகல் நிலவு, புது வசந்தம், நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், சின்ன பசங்க நாங்க, என்றும் அன்புடன், அதர்மம, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, தினந்தோறும், தேசிய கீதம், இரணியன், ஆனந்தம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களை முக்கியமானவையாக சொல்லலாம்.
முரளி ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும் அவர் நடித்த கடல் பூக்கள் படத்துக்காக 2001ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ். படித்துள்ள தனது மகளுக்கு மூன்று நாட்களுக்கு முன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்தம் செய்த முரளி அவரது திருமணத்தை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவரை அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று காலன் கூட்டிச் சென்று விட்டான்.
நேற்றிரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை பிணமாகத் திரும்பினார்.
அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ரசிகைகள் என தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செய்கிறது. நாளை இந்தக் கலைஞனின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது.
முரளிக்கு அஞ்சலி செலுத்திய சிவக்குமார், "முரளி வயசே ஆகாதவர். அவருக்கு மரணம் என்றால் அந்தக் கடவுளைத்தான் சபிக்க வேண்டும்" என்றார். அது உண்மையே...
முரளியின் மரணத்தால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதுடன் முரளி என்ற மகா கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
முரளி நீங்கள் மறைந்தாலும், பொட்டு வைத்த வட்ட நிலாவிலும்... ஈரமான ரோஜாவேயிலும்... இன்னும் எத்தனையோ கீதங்களில் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.
-'பரிவை' சே.குமார்.
அவர் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஎன்னால் முதலில் நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். :(
பதிலளிநீக்குநம்ப முடியவில்லை, நல்ல டீசண்ட்டான நடிகர். நடிகர் சிவகுமார் போல் இளமையான நடிகர். இரங்கல்கள்.
பதிலளிநீக்குMay his soul rest in peace.
பதிலளிநீக்குஉண்மைதான் குமார்...........வலிக்கத்தான் செய்கிறது இதயம்!
பதிலளிநீக்குஉண்மைதான் குமார்...........வலிக்கத்தான் செய்கிறது இதயம்!
பதிலளிநீக்குமுரளியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..
பதிலளிநீக்குவாங்க சுசி மேடம்...
பதிலளிநீக்கு.
வாங்க ராஜ்குமார்...
வாங்க சீனி...
வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி. முரளியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
வாங்க சித்ரா மேடம்...
பதிலளிநீக்குவாங்க தேவா...
வாங்க வெறும்பய சார்...
வருகைக்கும் இரங்கலுக்கும் நன்றி. முரளியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
மிகவும் இளமையான நடிகர்!
பதிலளிநீக்குஇவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு மரணம் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
முரளி கடந்த வாரம் விஜய் டீ.வியில் கதை அல்ல நிஜத்தில் வந்து லட்சுமியிடம் பேசினார். இந்தவாரம் அவர் இல்லை என்று நினைக்கும் போது கஷ்டமாய் உள்ளது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தார்களுக்கு இறைவன் ஆறுதலை வழங்கட்டும்.
பதிலளிநீக்குமிகவும் வருத்தமாக இருக்கு..அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்...அவரின் பொற்காலம்+வெற்றிக் கொடி கட்டு+இதயம் படம் ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குஅதுவும் இதயம் படத்தில் வரும் இதயமே இதயமே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
எனக்கும் முரளியவர்களின் நடிப்பு பிடிக்கும். இயல்பான நடிப்பால் பல உள்ளங்களை கவர்ந்தவர். அவரின் ஆன்மா சந்தியடையட்டும்..
பதிலளிநீக்குமிக வருத்தமான விசயம். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
பதிலளிநீக்குஇன்னும் நம்பமுடியாமல் இருக்கிறது !
பதிலளிநீக்குஆழ்ந்த அனுதாபங்கள்.
விகடனில் நியூஸ் பார்த்தேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்வோம்.
பதிலளிநீக்கு:( ஆழ்ந்த அனுதாபங்களும், அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும்.
பதிலளிநீக்குபிறந்தது கர்நாடகம் என்றாலும் தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிப்படங்களில் நடிக்கவில்லை. //
இந்தத் தகவல் சரிதானான்னு செக் செய்துக்கோங்க. தினசரியில் அவர் கன்னடம், தெலுங்கிலும் ஆரம்பத்தில் நடித்துள்ளதாக வாசித்தேன்.
அவ்வளவாக அறியாத நடிகர்.
பதிலளிநீக்குஎப்படி இறந்தார் என்பதை எப்படி வாழ்ந்தார் என்பதில் நிறைவு காணலாம். இணையத்தில் இத்தனை இரங்கல்களைப் படிக்கும் பொழுது நிறைய நெஞ்சங்களைத் தொட்டிருக்கிறார் என்பது புரிகிறது. வாழ்ந்த காலங்களின் நேர்த்தி புரிகிறது.
நன்றி ஸ்ரீஅகிலா
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு
நன்றி மேனகா மேடம்.
நன்றி மலிக்கா அக்கா
பதிலளிநீக்குநன்றி அக்பர்
நன்றி ஹேமா அக்கா.
நன்றி வானதி
பதிலளிநீக்குநன்றி விக்னேஷ்வரி
நன்றி அப்பாதுரை.
முரளி நீங்கள் மறைந்தாலும், பொட்டு வைத்த வட்ட நிலாவிலும்... ஈரமான ரோஜாவேயிலும்... இன்னும் எத்தனையோ கீதங்களில் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.
பதிலளிநீக்குவாங்க சரவணன்...
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.